தொழில்நுட்பம்

பொருள் புதுசு: மடக்கும் குடுவை

செய்திப்பிரிவு

மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையிலான குடுவை. சிறு அடுப்புகளில் வைத்து சூடேற்றலாம். அடிப்பாகம் அலுமினியத்தால் ஆனது. பைபர் கிளாஸ் கோட்டிங் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் லஞ்ச் பாக்ஸ்

வழக்கமான லஞ்ச் பாக்ஸ்க்கு மாற்றாக எளிமையான, ஸ்டைலான லஞ்ச் பாக்ஸ் இது. தெர்மோ கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் உணவு அதே தரத்துடன் இருக்கும். கசிவு இருக்காது. கையாளுவதும் எளிது.

நானோ ஷவர்

குளியலறையில் 75 சதவீத தண்ணீரை மிச்சப்படுத்தும் ஷவர் இது. இதிலுள்ள நானோ பில்டர்கள் நீரிலுள்ள குளோரினை நீக்குவதுடன், குறைவான நீரை அதிக அழுத்தத்துடன் வெளியேற்றும்.

SCROLL FOR NEXT