தொழில்நுட்பம்

பொருள் புதுசு: தொடுதிரை இசைக் கருவி

செய்திப்பிரிவு

வீட்டிலேயே இசை பழகுபவர்களுக்கு ஏற்ற தொடுதிரை இசைக் கருவி. 60 இசைக் குறியீடுகளை வெளிப்படுத்தும். தொடுதிரையில் இசைக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருக்கிறது. கையடக்கமாக இருப்பதால் எடுத்துச் செல்வதும் எளிது.

270 டிகிரி டார்ச் லைட்

பாக்கெட் அளவு டார்ச் லைட். தானாகவே போகஸ் செய்யும் வசதி கொண்டது. 12 டிகிரி முதல் 270 டிகிரி வரை வெளிச்சம் வருவது போலவும் மாற்றிக் கொள்ளலாம். லித்தியம் 3000 எம்ஏஹெச் பேட்டரியில் இயங்கும்.

துண்டு உலர்த்தும் கருவி

ஈரத் துண்டுகளை விரைவில் உலர்த்தும் கருவி. எந்த இடத்திலும் எளிதாகப் பொருத்திக் கொள்வதற்கு ஏற்ப ஹேங்கர் உள்ளது. துண்டுகளின் அகலத்துக்கு ஏற்ப `அட்ஜெஸ்ட்’ செய்யும் வசதியும் உள்ளது.

SCROLL FOR NEXT