புதிய புத்தகங்களை அறிமுகம் செய்துகொள்ளப் புதிய வழியாக அறிமுகம் ஆகியிருக்கிறது ஹைலிரெக்கோ (>https://www.highlyreco.com/ ) இணையதளம்.
மிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், தொழில்நுட்பத் துறையில் பிரபலமாக இருக்கும் வல்லுநர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் பரிந்துரை செய்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் முதல் அவற்றில் முதலீடு செய்யும் வல்லுநர்கள் வரை பலரது வாசிப்புகளை இந்தத் தளத்தின் மூலம் அறிமுகம் செய்துகொள்ளலாம். படிக்க வேண்டிய முக்கிய புத்தகங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
வலைப்பதிவு, பேஸ்புக் பக்கம், டிவிட்டர் எனப் பல இடங்களில் பிரபலங்கள் பகிர்ந்துகொண்ட புத்தக வாசிப்பு தொடர்பான கருத்துகளைத் தேடி எடுத்து அழகாகத் தொகுத்தளிப்பது இதன் தனிச்சிறப்பு.