தொழில்நுட்பம்

ஸ்மார்ட் போன் பாதிப்பு

சைபர் சிம்மன்

ஸ்மார்ட் போனைத் தினமும் எத்தனை முறை எடுத்துப் பார்க்கும் வழக்கம் உங்களிடம் இருக்கிறது என்று தெரியுமா? அநேகமாக வாரத்திற்கு 1,500 முறை நீங்கள் போனை வெளியே எடுத்துப் பார்க்கலாம்.

ஏனெனில், புதிய ஆய்வு ஒன்று இப்படித்தான் சொல்கிறது. டெக்மார்க் மார்கெட்டிங் நிறுவனம் சார்பில் 2,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அவர்கள் சராசரியான வாரத்துக்கு 1,500 முறை ஸ்மார்ட் போனை எடுத்துப் பார்ப்பதாகவும், தினமும் 3 மணி நேரம் அதன் திரையைத்தான் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இதுகூடப் பரவாயில்லை, பலரும் ஸ்மார்ட் போனை வெளியே எடுத்துப் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் தன்னிச்சையாக அவ்வாறு செய்வதாகக் கூறியுள்ளனர். அது போலவே தங்களை அறியாமலே ஃபேஸ்புக் மற்றும் இமெயிலைத் திறந்து பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

சராசரியாக, 221 செயல்களுக்காக ஸ்மார்ட் போனை நாடுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஸ்மார்ட் போனுக்கே இப்படி என்றால், இன்னமும் ஸ்மார்ட் வாட்சையும் கட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்?

SCROLL FOR NEXT