தொழில்நுட்பம்

செயலி புதிது: இரவு வானம் காண்போம்!

சைபர் சிம்மன்

இரவு வானத்தைப் பார்க்க வேண்டும் என்றால், உங்கள் உள்ளங்கையிலேயே பார்க்கலாம். நைட் ஸ்கை லைட் செயலிதான் இப்படி உள்ளங்கையில் வானத்தைக் கொண்டுவருகிறது.

நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்க்கலாம், வானவெளி பற்றிய பல தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். அனிமேஷன் வழிகாட்டுதலும் இருக்கிறது.

பூமியின் மேல்பரப்பை 3டியில் பார்க்கலாம். இரவு வானத்தை உங்களைப் போலவே பார்த்து ரசிக்கும் சக வானவியல் ரசிகர்களைத் தொடர்புகொள்ளலாம். உலகப் பயணி பாணியில், எந்த இடத்திலிருந்தும் உலகை வானத்தைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. வானத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகளையும் தவறவிடாமல் இருக்கலாம்.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய:>https://play.google.com/store/apps/details?id=com.icandiapps.thenightskylite

SCROLL FOR NEXT