சட்டை பொத்தான் அளவேயான காம்பஸ் இது. வழி குழப்பமாகும் இடங்களில் திசைகளைக் காட்டும். நெருப்பு, நீர், பனி எல்லா சீதோஷ்ண நிலைக்கும் தாக்குபிடிக்கும். மைக்ரோ டெக்னாலஜி தொழில்நுட்பம் கொண்ட இதை ரீசார்ஜ் செய்து பயன்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட் சூட்கேஸ்
பயணத்துக்கான சூட்கேஸிலேயே போனுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். வைஃபை இணைப்பு, ஒளிரும் எல்இடி என ஈர்க்கும் அம்சங்களுடன் உள்ளது. பூனைக்குட்டிபோல இரண்டு காதுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பெட்டி அனைவரையும் ஈர்க்கும்.
ஸ்மார்ட் பேஸ்பால்
பேஸ்பால் விளையாடுபவர்களுக்கு பல வகையிலும் பயன்படும் ஸ்மார்ட் பேஸ்பால். பந்துக்குள் சிறிய சிப் பொருத்தப்பட்டுள்ளது. பந்து வீசப்படும்போது பந்தின் வேகம், திசை, சுழல், அழுத்தம் என பல விவரங்களும் இதன் செயலிக்கு கிடைத்து விடும்.
ரோபோ தோல்
நுண்ணுணர்வு ரோபோகளை உருவாக்கும் தொடர் ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாக மனித தோல்களைப் போல் உணர்திறன் கொண்ட மேல்பாகத்தை உருவாக்க முனைந்துள்ளனர் ஆராய்சியாளர்கள். இதற்காக பாம்புகளின் மேல் தோலினைப்போல மிக மிருதுவான மின்னணு தோலினை உருவாக்கியுள்ளனர். இந்த தோல் பல விதமான அதிர்வுகளையும் உள்வாங்கும். ஒரு பொருளை தொடும்போது மனித தொடுதல் போலவே ரோபோவும் உணர்ந்து கொள்ள இந்த செயற்கை தோல் உதவும் என்றும் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட் சீப்பு
அழகு சாதன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லோரியல் நிறுவனம் ஸ்மார்ட் சீப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. தலையை வாரும் போது எழும் அதிர்வு மற்றும் ஒலியைக் கொண்டு தலைமுடியின் தன்மையை ஸ்மார்ட்போனுக்கு அனுப்புகிறது. தலையை விருப்பத்துக்கு ஏற்ப வாருவதற்கான அழுத்தத்தையும் கொடுக்கும். வைஃபை, புளூடூத் வழி தகவல்களை அனுப்புகிறது. லாஸ் வேகாஸில் நடந்த சிஇஎஸ் கண்காட்சியில் இந்த சீப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.