பாட்டிலில் இருந்து எவ்வளவு தண்ணீர் குடித்தோம் என்பதைத் தெரியப்படுத்தும் ஸ்மார்ட் தண்ணீர் குடுவை இது. புளூடூத், வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது. ஸ்மார்ட்போன் செயலி மூலம் இயங்கும்.
ஸ்மார்ட் டி ஷர்ட்
நான்கு பக்கமும் பயன்படுத்தும் டி ஷர்ட்டை முதல் முறையாக இத்தாலியைச் சேர்ந்த உட்ஸூ என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ளது. வியர்வை வாடையை வெளிப்படுத்தாது. அயர்ன் செய்யவும் தேவையில்லை.
நானோ ஸ்பார்க்
எரிபொருள் தேவையில்லாமல் தீயை உருவாக்கும் மிகச் சிறிய கருவி. இதன் முனையில் உள்ள லைட்டர் போன்ற அமைப்பால் தீ மூட்டலாம். இதன் அடிப்பாகத்தில் பஞ்சை சேமிக்கவும் இடம் உள்ளது.
கீதா ரோபோ
கடைகளுக்கு சென்று வருகையில் பொருட்களை எடுத்து வருவதற்கு சிரமமாக இருக்கும். இந்தக் கவலையை போக்குவதற்கு பியாஜியோ நிறுவனம் `கீதா’ என்ற புதிய வகை ரோபோவை வடிவமைத்துள்ளது. சைக்கிளுக்குரிய சக்கரங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கீதா ரோபோவில் 15 கிலோகிராம் முதல் 18 கிலோகிராம் வரையிலான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். சாதரணமாக சைக்கிளை விட வேகமாக செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறிய ஸ்மார்ட்போன்
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான யுனிஹெர்ட்ஸ் உலகிலேயே மிகச் சிறிய ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. ஜெல்லி என்று இந்த ஸ்மார்ட்போனுக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நவுகாத் தொழில்நுட்பத்துடனும் 2.45 அங்குல திரையையும் கொண்டிருக்கிறது. மூன்று நாட்கள் வரை சார்ஜ் இறங்காமல் இருக்கும் வகையில் வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.