ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் இணைய மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வர உள்ளார்.
அக்டோபர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் (Internet.org summit) என்கிற இணைய மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இந்தியா வர உள்ளார்.
இந்த மாநாட்டில் இணைய வளர்ச்சி குறித்தும் அதன் பயன்பாட்டால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்ற உள்ளார்.
மாநாட்டில் பங்கேற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுடன் மார்க் ஸ்க்கர்பெர்க் சந்திப்பு மேற்கொள்ள உள்ளார்.