தொழில்நுட்பம்

உங்கள் போன் உங்கள் தயாரிப்பு

செய்திப்பிரிவு

உங்கள் போன் உங்கள் தயாரிப்பு

உங்களுக்கான ஸ்மார்ட்போனை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறது ஸ்பீடு ஸ்டூடியோ என்கிற நிறுவனம். இவர்களது ‘ரீபோன் கிட்’ என்கிற போன் உபகரணங்களை பயன்படுத்தி இதை தயாரித்துக் கொள்ளலாம். இதன் விலை 100 டாலர்கள்.

சைக்கிள் ஹேங்கர்

சைக்கிள் நிறுத்தக்கூட இடம் இல்லாதவர்களுக்கு பயன்படும் ஹேங்கர் இது. ஹிப்லாக் என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதை சுவரில் பொறுத்தி விட்டு சைக்கிளை மாட்டிவிடலாம். பூட்டும் வசதியும் உள்ளது.

சார்ஜிங் ஹேண்ட்பேக்

பயணங்களில் ஸ்மார்ட்போன்களில் சார்ஜிங் செய்வதற்கு சார்ஜர் பேங்கை தனியாக கொண்டு செல்ல வேண்டும். இதிலும் புதுமையான வகையில் எமர்க் அண்ட் ஓக் நிறுவனம் ஹேண்ட் பேக்கிலேயே சார்ஜர் ஏற்றிக்கொள்ளும் வசதியுடன் ஹேண்ட் பேக்கை வடிவமைத்துள்ளது.

SCROLL FOR NEXT