சமையல் செய்து பரிமாறு வதற்கும் ரோபோ வந்துவிட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. மனித கைகளைப் போல வளைந்து நெளிந்து இந்த ரோபோ சமையல் வேலைகளை கவனிக்கிறது. சமையல் கலைஞர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக இந்த ரோபோவின் செயல்பாடுகள் இருக்கும் என கூறியுள்ளது இதை வடிவமைத்துள்ள நிறுவனம். தானியங்கி முறையில் சமைத்து, பறிமாறவும் எதிர்காலத்தில் இந்த ரோபோ பயன்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
போன் ஸ்டேண்ட்
ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி வீடியோ எடுப்பவர்களுக்குப் பயன்படும் கருவி. கேமராவைத் தாங்கும் ஸ்டேண்ட்போல இது பயன்படும். மைக் மற்றும் பிளாஷ் லைட் போன்றவற்றையும் இதில் பொருத்திக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி கருவி
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர்கள் வெளியூர் செல்லும் இடங்களிலும் உடற்பயிற்சியை தொடர ஏதுவான சிறிய கருவி இது. எந்த இடத்திலும் பொருத்திக் கொண்டு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.