தொழில்நுட்பம்

செயலி புதிது: கூகுள் வரைபடத்தில் புதிய வசதி

சைபர் சிம்மன்

புதிய இடங்களில் வழிகாட்டியாக, ‘கூகுள் மேப்' வரைபட வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு பயனாளிகள் கூகுள் வரைபடத்தை 'வை‍ஃபை' அமைப்பில் மட்டும் அணுகலாம். குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இப்போது பரவலாக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்ல, கூகுள் வரைபடத்தைப் பயனாளிகள் தங்கள் எஸ்.டி கார்டிலும் சேமித்துக்கொள்ளலாம். இதன் மூலம் இணைய இணைப்பை மிச்சம் செய்யலாம் என்பதோடு, இணைய இணைப்பு மோசமாக உள்ள இடங்கள் அல்லது இணைய வசதி இல்லாத இடங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்கள் அறிய: >http://bit.ly/1oibADN

SCROLL FOR NEXT