தொழில்நுட்பம்

செயலி புதிது: தேர்தல் ஆணையத்தின் புதிய செயலி

சைபர் சிம்மன்

தேர்தல் ஆணையம் சார்பில் ‘இ.சி.ஐ. ஆப்ஸ்’ எனும் பெயரில் புதிய ஒருங்கிணைந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்கள், வாக்குச் சாவடிகள், தேர்தல் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகள் தொடர்பான தகவல்களையும் இந்தச் செயலி கொண்டுள்ளது.

தேர்தல்கள் தொடர்பான தகவல்களை வாக்காளர்கள், வேட்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் எளிதான வகையில் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள், மக்கள், வாக்காளர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், ஊடகம் உள்ளிட்ட பிரிவுகளை இந்தச் செயலி கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. தொடர்புடைய மற்ற செயலிகளையும் இதில் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்தச் செயலி அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாக உள்ளது.

மேலும் தகவல்களுக்கு:>https://play.google.com/store/apps/details?id=eci.com.neologicx.eci&hl=en

SCROLL FOR NEXT