தொழில்நுட்பம்

செயலி புதிது: ஐபோனின் முகப்பு பக்கங்கள்

சைபர் சிம்மன்

ஐபோனுக்கான அருமையான செயலியாக ஹோம்ஸ்கிரீன். மீ செயலி அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்ப இந்தச் செயலி ஐபோன் பயனாளிகள் தங்கள் போனின் முகப்பு பக்கமான ஹோம்ஸ்கிரீனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வழிசெய்கிறது.

ஹோம்ஸ்கிரீன் பயனாளிகள் இந்தச் செயலியின் மூலம் சக பயனாளிகளின் ஐபோன் முகப்புப் பக்கங்களையும் பார்க்கலாம். இப்படி முகப்புப் பக்கங்களை நோக்குவதன் மூலம் பொதுவாக மற்றவர்கள் பயன்படுத்தும் செயலிகளையும் அறிந்துகொள்ளலாம். புதிய செயலிகள் மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளை அறிந்துகொள்ளவும் இது சுவாரஸ்யமான வழியாக அமைகிறது. வால்பேப்பர் தோற்றங்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

நண்பர்கள் மற்றும் பயனாளிகள் பகிரும் முகப்புப் பக்கங்கள் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட முகப்புப் பக்கங்களும் பரிந்துரைக்கப் படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையதளம் வாயிலாக ஐபோன் முகப்புப் பக்கத்தை வெளியிட்டு அந்த இணைப்பை டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள உதவிய இந்த சேவை இப்போது ஐபோன் பயனாளிகளுக்கான முழு வீச்சிலான செயலியாக அறிமுகமாகியிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: >>http://homescreen.me/

SCROLL FOR NEXT