தகவல் தொழில்நுட்ப உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜீப்ரானிக்ஸின் விளம்பரத் தூதராக மாறியுள்ளார் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.
கணினி உதிரிபாகங்கள், நுகர்வோர் மின்னணுக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற சாதனங்களை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இளைஞர்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள பொருட்களை விளம்பரப்படுத்த இளைஞர்களின் பிரதிநிதியாக ஒருவர் தேவை. அதற்கு ஹ்ரித்திக் ரோஷன் சரியான இருப்பார் என அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீப்ரானிக்ஸ் இயக்குனர் திரு. ராஜேஷ் தோஷி இதுபற்றி கூறும்போது: "சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் பிராண்டிற்கான மறுக்க முடியாத தேர்வாக ஹ்ரித்திக் ரோஷன் உள்ளார். அவர் இளமையான உற்சாகத்துடனும் நேர்மறையான ஊக்கத்துடனும் உள்ள ஒரு பல்சுவை நடிகராவார், இது எங்கள் வாடிக்கையாளரை அடையவும், பிராண்ட்டை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் புதிய வீரியத்தைக் கொண்டுவரும்" என்று கூறினார்.
ஜீப்ரானிக்ஸின் விளம்பரத் தூதரான ஹ்ரித்திக் ரோஷன் கூறும்போது: "இந்திய இளைஞர்களுடன் ஜீப்ரானிக்ஸ் வளர்ந்து கொண்டாடப்படுவதையும், இன்றைய தலைமுறையின் மாறுகிற வாழ்க்கைக்குத் தீர்வுகளை வழங்குவதையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நடிப்புக்கான எனது விருப்பத்தைத் தவிர, இசை என்னை மேலும் இயங்குவதற்குத் தூண்டுகிறது, இப்போது இந்தியாவில் ஆடியோ தயாரிப்புகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜீப்ரானிக்ஸை விட பொருத்தமானது வேறென்ன. எனவே, நான் ஜீப்ரானிக்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்".
அறிமுகங்கள் மற்றும் விளம்பரங்களைத் தவிர, ஹ்ரித்திக் ரோஷன் பல்வேறு தளங்களுக்கிடையே பிராண்ட் தொடர்புடனும் தீவிரமாக ஈடுபடுவார் என்று ஜீப்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது.