கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவிலும் அணுகலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது, ஆண்ட்ராய்டு போன்களுக்கான விக்கிப்பீடியா செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வடிவில் மாற்றி அமைக்கப்பட்ட முகப்புப் பக்கம் மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
செயலியைத் திறந்ததும் தோன்றும் முகப்புப் பக்கத்தில் தேடல் வசதி பிரதானமாக இருக்கிறது. இங்கிருந்தே வேண்டிய கட்டுரைகளைத் தேடத் தொடங்கலாம். குரல் வழித் தேடலுக்கான வசதியும் இருக்கிறது.
தேடல் பகுதிக்குக் கீழ், பிரபலமாக உள்ள கட்டுரைகள், செய்திகள் மற்றும் ஒளிபடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. வாசிக்கும் கட்டுரைகளுக்குத் தொடர்புடைய கட்டுரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. பின்னணி மற்றும் எழுத்துரு அளவிலும் மாற்றங்களைச் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு: >https://play.google.com/store/apps/details?id=org.wikipedia