தொழில்நுட்பம்

பொருள் புதுசு: வீட்டு வேலைக்கு ரோபோ

செய்திப்பிரிவு

மின்னணு தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சோனி புதிய ரோபோவைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஏஐ என்கிற சீரியல் கொண்ட இந்த ரோபோ செயற்கையான நுண்ணுணர்வுடன் செயல்படும். வீட்டு வேலைகள் செய்ய பயன்படுத்தலாம். பெர்லினில் நடைபெற்ற ஐஎப்ஏ மின்னணு கண்காட்சியில் இந்த ரோபோவை சோனி நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. அதிக சென்சார் தொழில்நுட்பங்களுடன் இந்த ஏஐ ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் கஸூ ஹிராய் குறிப்பிட்டுள்ளார்.

`ஜீரோ டச்’

லோகிடெக் நிறுவனம் புதிதாக `ஜீரோ டச்’ என்கிற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. காரில் சென்று கொண்டிருக்கும்போது ஸ்மார்ட்போனை தொடாமலேயே இயக்குவதற்கு இந்த கருவி பயன்படும். இதை காரின் டாஷ்போர்டு அல்லது முன்பக்க கண்ணாடியில் பொருத்திக்கொண்டு அதில் ஸ்மார்ட்போனை ஒட்டவைத்துவிடவேண்டும். அதன் பிறகு குரல் வழியாக கட்டளைகளைப் பிறப்பித்து ஸ்மார்ட்போனை இயக்கலாம். விலை 59.99 டாலர்.

SCROLL FOR NEXT