தொழில்நுட்பம்

பொருள் புதுசு: மிருதுவான துண்டு

செய்திப்பிரிவு

ஜப்பானில் மிகப் பிரபலமானது ஆன்சென் குளியல். இந்த பெயரில் ஒரு துண்டு உருவாக்கியுள்ளனர் இது அதிக நீர் உறிஞ்சும் திறன், மிருது தன்மை, விரைவில் நீர் ஆவியாவது போன்ற அம்சங்களுடன் இருக்கும்.

சாலட் மேக்கர்

சாலட் தயாரிக்க காய்களையோ, பழங்களையோ நறுக்க தோதான இடம் தேவை. அந்த குறையை போக்குகிறது இந்த சாலட் மேக்கர். தேவையானவற்றை இந்த டப்பாவுக்குள் போட்டு இடைவெளியில் கத்தியை வைத்து நறுக்கினால் சாலட் தயார்.

உடனடி ஜிம்

பயணம் சென்ற இடத்தில் உடற்பயிற்சியை தொடர நினைப்பவர்களுக்கு தேவைப்படும் உடற்பயிற்சி கருவி. குறைவான எடையில் கையாள எளிதாகவும், அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் இருக்கும்.

அமேசான் பிரைம் ஏர்

அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய ஆளில்லா விமான சேவைக்கான முயற்சியில் உள்ளது. கடந்த டிசம்பரில் ட்ரோன் மூலம் முதல் டெலிவரியையும் சோதனை செய்துள்ளது. ட்ரோன் மூலம் ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு மட்டுமே டெலிவரி செய்ய முடியும். அதன் அடுத்த கட்டமாக ஒரே நேரத்தில் அதிக டெலிவரிகளை செய்யும் ட்ரோன் வடிவமைத்து வருகிறது. இதன் மூலம் 30 நிமிடத்தில் பொருட்களை டெலிவரி செய்ய அமேசான் திட்டமிட்டு வருகிறது.

ஹாட் வீல்ஸ் வீடியோ கேம்

பிசியோனிக்ஸ் கேம்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் லீக்ஸ் வீடியோ கேம் வரிசையில் புதிதாக ஹாட் வீல்ஸ் என்கிற வீடியோ கேம் வெளிவந்துள்ளது. நிழலோடு நிஜ உலகத்தையும் இணைக்கும் கார் பந்தய விளையாட்டு இது. வீட்டிலேயே குடும்பத்தோடு விளையாடலாம் என்பதால் அமெரிக்காவில் பிரபலமாக உள்ளது. அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெற உள்ள பொம்மை கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. வீடியோ விளையாட்டுகளுக்காக பல விருதுகளையும் இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

SCROLL FOR NEXT