லேப்டாப்பில் தான் எத்தனை பிராண்ட்கள், எத்தனை ரகங்கள். புதிய லேப்டாப் வாங்க லேட்டஸ்டான பிற லேப்டாப்களோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினால் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடவும் வேண்டாம். அமெரிக்கரான மரேக் கிப்னே (Marek Gibney ) அருமையான வழியை இதற்காக உருவாக்கி இருக்கிறார்.
லேப்டாப்களுக்கான சுற்றுலா வரைபடம் மூலம் லேப்டாப் தொடர்பான எல்லா விவரங்களையும் ஒரே சார்ட்டில் கொண்டுவந்துவிட்டார் இவர். இந்த வரைபடத்தில் லேப்டாப்கள் சின்ன சின்ன ஐகான்களாக இடம்பெற்றுள்ளன. எந்த ஐகான் அருகே மவுஸ் சுட்டியைக் கொண்டு சென்றாலும் அந்த லேப்டாப்பின் படம் மற்றும் விலை உள்ளிட்ட அம்சங்கள் தோன்றுகின்றன.