தொழில்நுட்பம்

வீடியோ புதிது: திறமையைச் சோதிக்கும் வீடியோ!

சைபர் சிம்மன்

‘மல்டிடாஸ்க்கிங்' எனும் பதம் அடிக்கடி இணைய உலகில் பயன்படுத்தப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்யக்கூடிய திறனே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

இணைய வசதி மற்றும் லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களின் ஆதிக்கம் காரணமாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போதே இன்னொரு வேலையையும் கவனிக்கக் கூடிய நிலையை ஏற்பட்டுள்ளது. இதைப் பன்முக‌ வேலைத் திறன் என்றும் வைத்துக்கொள்ளலாம். கவனச்சிதறல் என்றும் கொள்ளலாம். இது மிகுந்த விவாத‌த்திற்கு உரியது. ஆனால், தங்களிடம் மல்டிடாஸ்க்கிங் திறன் இருக்கிறதா என்பதைப் பயனாளிகள் தங்களைச் சோதித்துக்கொள்ள விரும்பினால் இந்த வீடியோவைப் பயன்படுத்தலாம். பிரபல இணையதளமான ‘பஸ்பீட்' இதற்காக ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளது.

இந்த வீடியோவைக் கவனமாகப் பார்த்து அதன் பின் கேட்கப்படும் கேள்விகளுக்கு, மீண்டும் வீடியோவைப் பார்க்காமலேயே பதில் சொல்ல வேண்டும். இந்தச் சோதனையும் சுவாரஸ்ய‌மாக இருக்கிறது. அதில் விவரிக்கப்படும் கதையும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT