தொழில்நுட்பம்

செயலி புதிது: ஒளிப்படங்களை மெருகேற்ற...

சைபர் சிம்மன்

ஒளிப்படங்களைத் திருத்தி மெருகேற்றி மேம்படுத்த வேண்டும் என்றால் அடோபின் போட்டோஷாப் சிறந்த வழியாக விளங்குகிறது. பொதுவாக ஸ்மார்ட்போனில் எடுக்கும் ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, போட்டோஷாப் அளவுக்கு நுட்பமான மென்பொருள்கள் தேவையில்லைதான். ஆனால், சில நேரங்களில் ஒளிப்படங்களை மேம்படுத்தும் தேவையை உணர்ந்தால், ‘போட்டோஷாப் ஃபிக்ஸ்’ செயலியை நாடலாம். இதுவரை ஐகைபேசிகளுக்கான வடிவில் மட்டுமே செயல்பட்ட இந்தச் செயலி தற்போது புதிய அம்சங்களைப் பெற்றிருப்பதுடன், ஆண்ட்ராய்டு கைபேசிகளுக்காகவும் அறிமுகமாகியிருக்கிறது.

இந்தச் செயலி மூலம் ஸ்மார்ட்ஃபோனில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இனி இஷ்டம் போல மேம்படுத்திக் கொள்ளலாம். படத்தின் அளவை மாற்றுவது, அதன் வண்ணம் உள்ளிட்ட அம்சங்களைத் திருத்துவது உள்ளிட்ட நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: >http://www.adobe.com/in/products/fix.html

SCROLL FOR NEXT