தொழில்நுட்பம்

தள‌ம் புதிது: கோப்புகளைப் பகிர...

சைபர் சிம்மன்

இணையம் மூலம் கோப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கான இன்னொரு எளிய வழியாக ‘டேக் எ ஃபைல்’ இணையதளம் அமைகிறது. இந்தத் தளம் மூலம், உங்கள் பிரவுசரில் இருந்து இன்னொருவருக்குக் கோப்புகளை அனுப்பி வைக்கலாம்.

எந்த அளவிலான கோப்பையும் எளிதாக அனுப்பி வைக்கலாம் என்கிறது இந்தத் தளம். இதன் முகப்புப் பக்கத்தில் உள்ள பகிர்வுக் கட்டத்திலிருந்து தேவையான கோப்பைத் தேர்வு செய்ய வேண்டும். அல்லது டெஸ்க்டாப்பில் உள்ள கோப்பை இதில் கொண்டு வந்து வைத்தால் போதும், உடனே அதற்கான இணைப்பு ஒன்றை உருவாக்கிக் கொடுக்கும்.

கோப்பை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு இந்த இணைப்பை இமெயிலில் அனுப்பி வைத்தால் அவர் அந்த இணைப்பை கிளிக் செய்ததும் கோப்பு டவுண்லோடு ஆகிவிடும். ஆனால் அதுவரை அனுப்பும் நபர் தனது பிரவுசரில் இந்தப் பக்கத்தைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய‌: >https://takeafile.com/

SCROLL FOR NEXT