தொழில்நுட்பம்

தளம் புதிது: டைப்பிங் செய்ய உதவும் தளம்

சைபர் சிம்மன்

முன்புபோல இப்போது அதிகமானோர் டைப்பிங் வகுப்புக்குச் செல்வதில்லை. பெரும்பாலானோர் கம்ப்யூட்டரிலேயே டைப்பிங் செய்யப் பழகிவிடுகின்றனர். இருப்பினும், டைப்பிங் திறனை அதிகரித்துக்கொள்ளப் பயிற்சி தேவை என நினைத்தால் ‘டைப்பிங்கிளப்’ இணையதளம் அதற்கு உதவுகிறது. இந்தத் தளத்தில் பல்வேறு அளவிலான டைப்பிங் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தேர்வுசெய்து பயிற்சி பெறலாம். ஒவ்வொன்றுக்குமான விளக்க வீடியோவும் இருக்கிறது. டைப்பிங் செய்யும் வேகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தையும் இதில் அறிந்துகொள்ளலாம்.

இணையதள முகவரி; https://www.typingclub.com/

SCROLL FOR NEXT