தொழில்நுட்பம்

தேடு இயந்திரம் புதிது: வண்ணங்களைத் தேடலாம் வாங்க!

சைபர் சிம்மன்

சில நேரங்களில் வண்ணங்களையும் வண்ண சேர்க்கைகளையும் தேடும் தேவை ஏற்படலாம். இதுபோன்ற நேரத்தில் கைகொடுப்பதற்காகப் புதியதொரு தேடு இயந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது. பிக்யூலர் (https://picular.co/) எனும் இந்தத் தேடு இயந்திரத்தில், வண்ணங்களைத் தேடலாம். வழக்கமான தேடு இயந்திரம்போலவே இதிலும் கீவேர்டுகளைச் சமர்ப்பித்துத் தேடலாம். வழக்கமான தேடல் முடிவுகளுக்குப் பதிலாக வண்ண கட்டங்கள் வந்து நிற்கின்றன. மிக எளிமையான வடிவமைப்பில், சிக்கனமாக அமைந்திருக்கும் இந்தத் தேடு இயந்திரத்தைப் பயன்படுத்துவது எளிதானது.

SCROLL FOR NEXT