தொழில்நுட்பம்

வீடியோ புதிது: ஒரு சொல்லின் வரலாறு

சைபர் சிம்மன்

ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்றாக ஓ.கே. இருக்கிறது. ஆங்கிலம் அறியாதவர்கள்கூட, இந்த வார்த்தையைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். அனுமதி அல்லது உடன்படுவதைக் குறிக்கும் இந்த வார்த்தை எங்கிருந்து எப்படி உருவாகி வந்தது எனத் தெரியுமா?

தொடக்கத்தில் வார்த்தைகளைத் தவறாகச் சுருக்குவதன் விளைவாக உருவான இந்த வார்த்தை, தந்தி பிரபலமானபோது வெகுஜனப் புழக்கத்துக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற தகவல்களோடு ஓ.கே. வார்த்தையைச் சுவைபட விவரிக்கிறது வாக்ஸ் இணையதளம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள நாம் ஏன் ஓ.கே. சொல்கிறோம் எனும் வீடியோ.

SCROLL FOR NEXT