தொழில்நுட்பம்

செயலி புதிது: ஃபிளிப்கார்ட்டின் புதிய சேவை

சைபர் சிம்மன்

புதுப்பிக்கப்பட்ட சாதனங்களை விற்பனை செய்வதற்கான சேவையை செயலி வடிவில் ஃபிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் என்று வரும்போது புதிய மாடலில் போன்களை வாங்கலாம். தவிர பயன்படுத்திய பழைய போன்களையும் வாங்கலாம். இவை இரண்டுக்கும் இடையே ‘ரிபர்பிஷ்டு’ (Refurbished) எனப்படும் புதுப்பிக்கப்பட்ட சாதனங்கள் வருகின்றன.

பல்வேறு காரணங்களுக்கு வாங்கியவுடன் திரும்பி அளிக்கப்பட்டவை, வேறு பழுது காரணமாகத் திரும்பிப் பெறப்பட்ட போன்களைச் சரிபார்த்து முற்றிலும் பயன்படுத்தும் நிலையில் விற்பனை செய்வதே புதுப்பிக்கப்பட்ட போன்கள் என அழைக்கப்படுகின்றன. புதிய போன்களைவிட இவற்றைச் சற்றுக் குறைந்த விலையில் வாங்கலாம். புதிய போனின் அனுபவத்தைப் பெறலாம். இதற்காக ‘ஃபிளிப்கார்ட் 2குட்’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு: https://www.2gud.com/

SCROLL FOR NEXT