ஆப்பிள் நிறுவனம் அண்மையில் புதிய போன்களையும் அட்டகாசமான ஸ்மார்ட் வாட்ச் ஒன்றையும் அறிமுகம் செய்தது. இந்தியச் சந்தையில் இம்மாத இறுதியில் புதிய ஐபோன்கள் அறிமுகமாக உள்ளன. ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் ஆகிய மாதிரிகளின் விலை அமெரிக்காவிலேயே புருவங்களை உயர வைத்துள்ள நிலையில் இந்தியச் சந்தைக்கு வந்தால் கேட்கவே வேண்டாம்.
ஆனால், இவற்றின் பெரிய திறன், சிப்பின் கூடுதல் ஆற்றல், இரட்டை சிம் வசதி ஆகியவை பெரிதாகப் பேசப்படுகின்றன. புதிய போன்கள் தவிர ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் வாட்ச், கீழே விழுந்தால் அதை உணர்ந்து அவசர உதவிக்கு அழைக்கும் வசதி, இதயத் துடிப்பை அளவிடும் இ.சி.ஜி. வசதி ஆகியவற்றையும் பெற்றுள்ளது.