தொழில்நுட்பம்

செயலி புதிது: விரிவடையும் கூகுள் செயலி

சைபர் சிம்மன்

கடந்த சில மாதங்களுக்கு முன் நெய்பர்லி (Neighbourly) எனும் உள்ளூர் செயலியை கூகுள் அறிமுகம் செய்தது. உள்ளூர் தொடர்பான தகவல்களைக் கேள்வியாகக் கேட்டு, சகப் பயனாளிகளிடமிருந்து பதில் பெற இந்தச் செயலி வழி செய்கிறது. ஒவ்வொரு கேள்வியும் பொருத்தமாக உள்ளூர் வல்லுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பயனுள்ள பதில் கிடைக்கும் வகையில் இந்தச் செயலி செயல்படுகிறது.

முதல் கட்டமாக மும்பை, ஜெய்பூர் ஆகிய நகரங்களில் மட்டும் அறிமுகமான இந்தச் செயலி, தற்போது அகமதபாத், மைசூரு, விசாகப்பட்டினம், கோட்டா, கோவை ஆகிய ஐந்து நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் எட்டு இந்திய மொழிகளில் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

SCROLL FOR NEXT