ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பொருத்தவரை உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக சர்வதேச அமைப்பான ஜி.எஸ்.எம்.ஏ. தெரிவித்துள்ளது. இந்தியாவில் 11.1 கோடி ஸ்மார்ட்போன் இணைப்புகள் இருப்பதாக இதன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் சீனா, அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
ஸ்மார்ட்போனின் எதிர்கால போக்குகள், கணிப்புகள் தொடர்பான அறிக்கை இது. 2020 வாக்கில் ஸ்மார்ட்போன் இணைப்புகளில் ஐந்தில் நான்கு இணைப்புகள் வளரும் நாடுகளில் இருந்துவரும் எனத் தெரிவிக்கும் இந்த அறிக்கை, மூன்று போன்களில் 2 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் சொல்கிறது.
ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலை குறைந்து வருவது, பட்ஜெட் போன்களுக்கான தேவை ஆகியவை, இந்த வளர்ச்சிக்கு காரணங்களாகும்.
அடுத்த 18 மாதங்களில் மட்டும், 100 கோடி புதிய ஸ்மார்ட்போன் இணைப்புகள் உருவாகும் என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.