கல்லூரி மாணவர்கள் பணிக்கான முன் அனுபவம் பெற முன்னணி நிறுவனங்களில் உள்ள பயிற்சி நிலைப் பணிகளை நாடுகின்றனர். இத்தகைய பணி வாய்ப்புகளை இணையம் மூலமும் தேடலாம். இதற்கென பிரத்யேக இணையதளங்கள் இருக்கின்றன. இவ்வளவு ஏன், இணையம் மூலமே பயிற்சிப் பணியாளர்களாகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெறலாம்.
அதாவது, இருந்த இடத்திலிருந்தே உலகின் பல இடங்களில் உள்ள நிறுவனங்களில் பயிற்சி நிலை ஊழியர்களாகப் பணியாற்றி அனுபவம் பெறலாம். இதற்கான பணியிடங்களைப் பட்டியலிடுகிறது ரிமோட் இண்டர்ன்ஷிப்ஸ் இணையதளம். இதில் ஊதியம் அளிக்கக்கூடிய பயிற்சி வாய்ப்புகளையும் காணலாம். இத்தளத்தில் விண்ணப்பிக்கும் வசதியும் இருக்கிறது. மார்க்கெட்டிங், வடிவமைப்பு, பத்திரிகை, மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் வாய்ப்புகளை நாடலாம்.
முகவரி: http://remoteinternships.co/