தொழில்நுட்பம்

தகவல் புதிது: இந்தியாவில் ஸ்பாட்டிபை

சைபர் சிம்மன்

‘ஸ்பாட்டிபை’ சேவை ஸ்ட்ரீமிங் முறையில் பாடல்கள், இசைக்கோவைகளைக் கேட்டு ரசிக்க வழி செய்கிறது. உறுப்பினர்கள் கட்டணம் அல்லது விளம்பரம் சார்ந்த வசதியைத் தேர்வு செய்யலாம் என்பதால், இதில் காப்புரிமை பிரச்சினை கிடையாது. சட்டப்பூர்வமாக இசையைக் கேட்டு ரசிக்கலாம். ‘ஸ்பாட்டிபை’யில் மேலும் பல இசை சார்ந்த வசதிகள் இருக்கின்றன. இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்பாட்டிபை சேவை இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவில்லை. ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்தச் சேவையை விரிவாக்கம் செய்யும் ஆர்வத்தை இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT