அமெரிக்காவில் இருந்து போர்ஸ் ப்ரோ (Phorce Pro) ஸ்மார்ட் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேக், தொழில்நுட்ப சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான பேட்டரி கொண்டது. லேப்டாப் சார்ஜர், கேபிள் மற்றும் கனெக்டர் போன்றவை இதில் இருக்கிறது. இதைக் கொண்டு ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாமாம்.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன், எந்த அளவு சார்ஜ் மிச்சமுள்ளது என்பதையும் தெரிவிக்கக் கூடியது. ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களின் சார்ஜ் நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த பேகை எங்காவது மறந்து வைத்தாலும் இந்த அப்ளிகேஷனே அது குறித்த எச்சரிக்கை செய்தியையும் அனுப்பிவைக்கும். இந்த மாத இறுதியில் சந்தைக்கு வருகிறது. இந்த பேக்கைத் தேவைப்பட்டால் ப்ரீப்கேசாகவும் மாற்றிக்கொள்ளலாமாம். இணையதளம்: http://phorce.com/
இதே போலவே சாம்சங் நிறுவனமும் ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் கேபிளை அறிமுகம் செய்துள்ளது.