'ஜெப்-ஜர்னி' என்கிற புதிய ஹெட்ஃபோனை ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது.
கழுத்து பட்டைவடிவில் வடிவமைப்பட்டுள்ள இதில் 13 மணி நேரங்களுக்கு தடையில்லா இசையை அல்லது குரல்உதவியைப் பெறலாம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
வயர்லெஸ் ஹேட்ஃபோனான இதில் ஆண்ட்ராயிட் மற்றும் iOS போன்களுக்கான குரல் உதவி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரீசார்ஜபிள் பேட்டரி உள்ளது.
"எங்களுடைய இந்த 'ஜெப்-ஜர்னி' என்னும் புதிய படைப்பில், குரல் உதவி எனும் தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் அதிகமாக செயல்படலாம் மேலும் இது அதிக நேரம் இயங்கக்கூடிய வல்லமை கொண்டது, இசை பிரியர்களுக்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்டது" என்று ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரு.பிரதீப் தோஷி கூறியுள்ளார்.
இந்த ஹெட்ஃபோன் கருப்பு நிறத்தில் வருகிறது. இதன் விலை ரூ.1,399