நகரங்களில் வசிப்பவர்கள் தங்களது வீட்டுக்கான சாவியை இரண்டு மூன்று என செய்து வைத்துக்கொண்டு ஆளுக்கு ஒன்றாக பயன்படுத்துவார்கள். சில நேரங்களில் யாருடைய சாவியாவது தொலைகிற பட்சத்தில் கொஞ்சம் சங்கடமான நிலை உருவாகிவிடும்.
இந்நிலையில் இந்த பிரச்சினையை தீர்க்க நோக் எனப்படும் புதுவகை பூட்டு வந்துள்ளது. இந்த பூட்டில் புளூடூத் வசதி உள்ளது. குறிப்பிட்ட பாஸ்வேர்டை கொடுத்து அந்த பூட்டை நமது மொபைல்களுடன் இணைத்து கொள்ளலாம். மொபைலில் உள்ள புளூடூத்தை ஆன் செய்து அதனை அந்த பூட்டோடு இணைத்தால் பூட்டு திறந்துவிடும்.