தொழில்நுட்பம்

ஸ்மார்ட் பிரெஷ், ஸ்மார்ட் பேக், ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ்!

சைபர் சிம்மன்

சீன இணைய நிறுவனமான பெய்டு (Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு, சீனாவின் தேடு பொறி உலகில் தனிக்காட்டு ராஜா. உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடு பொறியாக விளங்கினாலும் சீனாவில் பெய்டுதான் நம்பர் ஒன்.

இப்போது பெய்டு சர்வதேச சந்தையையும் குறி வைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பெய்டு பிரேசிலில் அந்நாட்டுக்கான உள்ளூர் தேடு பொறியை அறிமுகம் செய்தது.

அதே போல கூகிள் கிளாசுக்குப் போட்டியாக , 'பெய்டு ஐ' எனும் அணி சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் காமிரா உண்டே தவிர டிஸ்பிளேக்கான திரை இல்லை.

எனினும் இது எப்போது சந்தைக்கு வரக்கூடும் என்பது பற்றி பெய்டு எதுவும் தெரிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT