ஒரு வழியாக ஐபோன் 6 அறிமுகமாகிவிட்டது. பரவலாக கணிக்கப்பட்டது போலவே ஐபோன் 6, சற்றே பெரிய அளவில் ஐபோன் பிளஸ் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் கடந்த 9ந் தேதி அறிமுகம் செய்தது. கூடவே ஆப்பிள் வாட்ச், சொல்போனில் பணம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆப்பிள் வாட்ச் அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு வருகிறது.
அறிமுக விழாவில், இது வரையிலான ஐபோன்களிலேயே சிறந்ததாக ஐபோன் 6 உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக் பெருமிதப்பட்டிருக்கிறார். ஆப்பிள் அபிமானிகளும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால்தான் ஐபோன் 6, ஐபோன் பிளஸ் ஆகியவற்றுக்கான முன்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 40 லட்சம் போன்கள் விற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
முன்பதிவில் ஐபோன் 6 மாதிரியைவிட அளவில் பெரிய (விலையும் அதிகம்) ஐபோன் பிளசுக்குதான் அதிக மதிப்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
எது எப்படியோ, ஐபோன் 6 மற்ற ஐபோன்கள் போல தாமதமாக அல்லாமல் சிக்கிரமே இந்தியாவுக்கு வருகிறது. அடுத்த மாதம் இந்தியாவிலும் வாங்கலாம் ஐபோன்6!.