தொழில்நுட்பம்

மீண்டும் ப்ரொஃபைல் பக்கத்தை மாற்றியமைக்கும் இன்ஸ்டாகிராம்

ஏஎன்ஐ

பயனர்களின் ப்ரொஃபைல் தோற்றத்தை இன்ஸ்டாகிராம் மீண்டும் மாற்றியமைக்க உள்ளது. ப்ரொஃபைல் பக்கத்தில் இருக்கும் விஷயங்களை இடம் மாற்றவும் உள்ளது.

இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை புதிய மாற்றங்களை பரிசோதிக்க உள்ளதாக அந்நிறுவனம் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதில் ப்ரொஃபைலுக்கு மேலே இருக்கும் அம்சங்கள் எப்படி தெரியும், ஐகான் மற்றும் பட்டன்களில் இருக்கும் மாற்றங்கள், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குச் செல்லும் முறை என மாதிரிப் புகைப்படங்களைக் காட்டியுள்ளது. 

இதில் முக்கிய மாற்றமாக, ப்ரொஃபைல் புகைப்படம் வலது பக்கம் மாறும், அதன் விவரணை இடது பக்கம் இருக்கும். லைக்ஸ் பக்கத்தில் மேலே ஒரு கட்டம் இருக்கும். அது பொதுவான நண்பர்கள் மூலம் எவ்வளவு லைக்குகள், தொடர்பவர்களிடமிருந்து எவ்வளவு, நீங்கள் தொடர்பவர்களிடமிருந்து எவ்வளவு லைக்குகள் போன்ற விவரங்களைக் காட்டும். வியாபாரத்துக்கான பக்கத்தில், 'Start Order' என்ற தேர்வும் இடம்பெறவுள்ளது. 

SCROLL FOR NEXT