தொழில்நுட்பம்

தகவல் புதிது: மறு அவதாரம் எடுக்கும் ‘வைன்’

சைபர் சிம்மன்

இப்போது டிக்டாக்காக மாறியிருக்கும் ‘மியூசிகலி’ செயலி  அறிமுகமாவதற்கு முன்பே இணையத்தில் கலக்கிக்கொண்டிருந்தது ‘வைன்’ (Vine). அமெரிக்காவின் டோம் ஹாப்மன், அவருடைய நண்பர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வைன், ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தது.

இந்தச் செயலியிலேயே படம் பிடிக்கும் கேமரா இருந்தது. படம் பிடித்து அதிலேயே ‘எடிட்’ செய்யலாம். இந்த அம்சங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, அசத்தலான ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி மகிழ்ந்தனர் அதன் பயனாளிகள். குறிப்பாக புதுமையான காமெடி வீடியோக்கள் வைனில் மிகப் பிரபலம்.

இதற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக ‘யாஹு’ நிறுவனம், முதலில் இதைக் கையகப்படுத்தி பின்னர் இதை மூடியது. வைனுக்குப் பிறகு ஸ்னேப்சாட், இன்ஸ்டாகிராம் எனப் பல செயலிகள் வந்துவிட்டாலும், இந்தச் சேவை மூடப்பட்டது வைன் அபிமானிகளை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதைப் போக்கும் வகையில் வைன் நிறுவனர் ஹாப்மேன், இதன் அடுத்த வடிவமான பைட் (Byte) செயலியை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். வைன் மாயத்தை இதனால் மீட்டெடுக்க முடிகிறதா எனப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT