ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் “ஸ்ப்லாஷ்” என்னும் சிறிய வடிவிலான ஒலிப்பெருக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜெப்ரானிக்ஸின் “ஆக்சில்” மாடலுக்கு பிறகு, அதிக பேஸ் அம்சம் கொண்ட ஒலிப்பெருக்கியாக ஸ்ப்லாஷ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்புறமாக உள்ள பட்டன்களின் மூலம் எளிதாக ஒலியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம், இணைப்பை மாற்றலாம். வயர் இல்லாமல் மொபைல், மெமரி கார்டு, AUX அல்லது USB மூலமாக தேவையான பாடல்களை கேட்கலாம்.
இந்த ஒலிப்பெருக்கியில் மொபைலில் வரும் அழைப்பை ஏற்கலாம் மற்றும் பேசலாம். இதில் ரேடியோ வசதியும் உள்ளது. இது மேற்புறமாக எடுத்துச்செல்லக்கூடிய வகையில் ஒரு கைப்பிடியுடன் வருகிறது.
இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி கருப்பு நிறத்தில் இந்தியாவின் முன்னணி கடைகளில் முழுவதும் விற்பனையில் உள்ளது. விலை ரூ. 1999