யூடியூப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ள கெவின் பாரி, அனிமேஷன் கலையில் திறன் பெற்றவர். இவரது வீடியோக்கள் எல்லாமே புதுமையாக இருக்கும். அண்மையில், இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் தூங்கி எழுவதைப் படம் பிடித்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒருவர் தூங்கி எழுவதில் ரசித்து பார்க்க என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்.
ஆனால், ஒவ்வொருவரும் எப்படித் தூங்கி எழுவார்கள் என விதவிதமாகத் தூங்கி எழுந்து, அந்தக் காட்சிகளைப் படம்பிடித்திருக்கிறார். சோம்பலுடன் தூங்கி எழுவது, இன்னும் 5 நிமிடம் கழித்து எழலாம் என நினைப்பவர்கள், யாரோ ஊடுருவியதுபோல நினைத்து திடீரெனக் கண் விழிப்பவர்கள் என மொத்தம் 50 விதமான தூங்கி எழும் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.
பலவிதமாகக் காரோட்டும் காட்சிகள், பலவிதமாகக் கதவைத் திறக்கும் காட்சிகளை எல்லாம் இவர் வீடியோவாக்கி இருக்கிறார்.
கெவினின் யூடியூப் சேனல்: https://www.youtube.com/user/kevinparry