இணைய கால் டாக்சி சேவையான உபெர் கையில் இருந்தால் உள்ளங்கையிலிருந்தே வாகனங்களை வரவழைத்துவிடலாம். ஸ்மார்ட்போன் யுகத்துக்கான செயலியாக உபெர் சேவை உள்ளது. எல்லாம் சரி, உபெர் சேவை, ஸ்மார்ட்போன் யுகத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் வகையில், அந்தக் கால இணையத்தில் உபெர் சேவை எப்படி இருந்திருக்கும் என விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்றை ஸ்கொரில் மங்கி யூடியூப் சேனல் உருவாக்கியுள்ளது. அந்தக் காலத்தில் இணைய சேவையின் தன்மை மட்டும் அல்ல, உபெர் போன்ற சேவைகள் இன்று தரும் அனுகூலத்தையும் புரிய வைக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.