தொழில்நுட்பம்

சேலத்தில் சில்லறை விற்பனை அங்காடி தொடங்கிய ஸீப்ரானிக்ஸ்

செய்திப்பிரிவு

IT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் பாகங்கள் மற்றும் கண்காணிப்புப் பொருட்களை விற்றுவரும் ஸீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சில்லறை விற்பனையை அதிகரிக்கும் விதமாக “ஸீப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப்” என்ற பிரத்தியேக அங்காடியை (Store)  சேலத்தில் திறந்துள்ளது.

மெய்யனூர் ARRS மல்ட்டிபிளெக்ஸ் அருகில்,  இருக்கும் இந்த பிரத்தியேகக் கடையில், பொருட்களை வாங்குவதற்கு முன் அதைத் தொட்டும் உணர்ந்து, எப்படி வேலை செய்கிறது என்பதை அனுபவித்து பின்னர் வாங்கலாம்.

DSC0099JPG

வளர்ந்து வரும் சேலத்தின் மொபைல் சந்தையை கருத்தில் கொண்டே இந்த சில்லறை விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளதாக ஸீப்ரானிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை திறப்பு விழாவில் பேசிய ஸீப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜேஷ் தோஷி “தமிழ்நாடு ஸீப்ரானிக்ஸ்-இன் சொந்த மண். எனவே சேலத்தில் எங்கள் முதல் ஸ்டோர் ஸீப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப்பைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பிராண்ட், பல்வேறு பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அறியப்படும் ஒரு பிராண்ட் ஆகும். நல்ல பேரம் மற்றும் தரமான தயாரிப்பை நேசிக்கும் பார்வையாளர்களுக்காக நடுத்தர நகரங்களில் எங்களது கடைகள் இருப்பதே எங்களது உண்மையான வலிமை" என்றார்.

அடுத்தடுத்து மற்ற நகரங்களிலிலும் கடைகளைத் திறக்கவுள்ளதாக தோஷி தெரிவித்தார். கிளை உரிமை பற்றிய கேள்விகளுக்கு enquiry@zebronics.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT