ஊக்கம் தரும் சொற்களைக் கேட்கும்போதோ உற்சாகமான வீடியோக்களைப் பார்க்கும்போதோ மனத்தில் தானாக ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். இந்த வகையான ஊக்கத்தைத் தினமும் பெற விரும்பினால், அதற்கு வழி செய்வதற்கென, ‘மோட்டிவேட்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியில், தினமும் தேர்வுசெய்யப்பட்ட, ஊக்கம் தரும் வீடியோக்களைப் பார்க்கலாம். யூடியூப்பில் சென்று தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தச் செயலியே அவற்றைத் தேர்வு செய்து வழங்குகிறது. இந்தச் செயலியில் பகிரப்பட்ட கடந்த கால வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால், அதற்கு கட்டணச் சேவைக்கு மாற வேண்டும். மற்றபடி அடிப்படை சேவை இலவசம்.
மேலும் விவரங்களுக்கு: https://www.getmotivateapp.com/