சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்துள்ளது பிரெஞ்சு தேச மொபைல் ஹேண்ட்செட் நிறுவனமான Alcatel. ‘வி3’ ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் மூன்று போன்களை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ள இந்த மூன்று போன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்சனின் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவில் இந்த போன்களை தயாரிக்கிறது. மற்ற மொபைல்போன் நிறுவனங்கள் வழங்காத தனித்துவ சலுகையை இளைஞர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தியாவில் Alcatel களம் கண்டுள்ளது.
இந்தியாவில் வி3 கிளாசிக், வி3 புரோ, வி3 அல்ட்ரா போன்களை Alcatel அறிமுகம் செய்துள்ளது. வரும் ஜூன் 2-ம் தேதி முதல் இந்த போன்களின் விற்பனை ஃப்ளிப்கார்ட் மூலம் இந்திய நகரங்களில் தொடங்குகிறது. ‘வி3’ ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள்