தொழில்நுட்பம்

பொருள் புதுசு: கையடக்க குளிரூட்டி

செய்திப்பிரிவு

பருவநிலைக்கு ஏற்ப நமது உடலை குளிரூட்டவோ அல்லது வெப்பமூட்டவோ உதவும் கருவி. டர்பைன் ஃபேனைக் கொண்டுள்ள இந்தக் கருவி 6 வண்ணங்களில் கிடைக்கிறது. புளோரிடாவைச் சேர்ந்த ஏர்விர்ல் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஹெல்மட் ஸ்பீக்கர்

இருசக்கர வாகனத்தில் பாடல்களைக் கேட்டுக்கொண்டு பயணம் செய்வபவர்களுக்கான ஸ்பீக்கர். வெளிப்புற சத்தத்தை கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கனடாவின் டோமியோ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கதை சொல்லும் பொம்மை

4 முதல் 10 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்ற கதைகளை கூறுதல், பொது அறிவுத் தகவல்களை கூறுதல், சிறிய விளையாட்டுகளை பயிற்றுவித்து அவற்றை விளையாடச் செய்தல் போன்றவற்றை செய்யும் பொம்மை. ஸ்மார்ட் ஃபோன் மற்றும் வீடியோ கேம் என்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளை வெளி உலகத்துக்கு அழைத்துவர உதவும். முதல்முறை பயன்படுத்தும்பொழுது இந்த பொம்மையை ப்ளூடூத் வழியாக ஸ்மார்ட் ஃபோனுடன் இணைக்கவேண்டும். ஸ்டோரி பால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குளோபல் ஸ்டார்ட் அப் விருதை பெற்றுள்ள இந்த பொம்மை குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப ஏழு வகைகளில் கிடைக்கிறது.

உபெர் இ-சைக்கிள்

உபெர் நிறுவனம் ஜனவரி மாதத்தில் சான்பிரான்சிஸ்கோ நகரில் வாடகை எலெக்ட்ரிக் சைக்கிளை அறிமுகம் செய்தது. சோதனை முறையிலான இந்த திட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். காலை மற்றும் மாலை வேலைகளில் கார்களில் பயணிப்பதைவிட அதிக மக்கள் இந்த சைக்கிளை பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக  உலக அளவில் முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் சைக்கிளை வாடகைக்கு விடவும் உபெர் திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT