ஆடியோ வடிவிலான நிகழ்ச்சிகளை இணையம் வாயிலாகக் கேட்டு ரசிப்பதற்கான வழியாக ‘பாட்காஸ்டிங்’ அமைகிறது. அண்மையில் கூகுள் நிறுவனம்கூட ‘பாட்காஸ்ட்’ செய்வதற்கான பிரத்யேகச் செயலியை அறிமுகம் செய்தது. பாட்காஸ்டிங் சேவைகளை வழங்கும் எண்ணற்ற அலைவரிசைககளும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் தொகுத்து வழங்கும் பத்திரிகையாக வில்சன். எப்.எம் செயலி அறிமுகமாகியுள்ளது. ஐபோனில் செயல்படும் இந்தச் செயலி புதிய பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்துகொள்ள வழிசெய்கிறது. மேலும் தகவல்களுக்கு: https://wilson.fm/