உலக நாடுகளில் பின்பற்றப்படும் விசா நடைமுறைகள், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த நாடுகளில் விசா இல்லாமல் பயணிக்கலாம் போன்ற தகவல்களை வரைபட வடிவில் அளிக்கிறது ‘டிராவல்ஸ்கோப்’ (https://www.markuslerner.com/travelscope/). இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள உலக வரைபடத்தில் எந்த நாட்டின் மீது மவுஸ் சுட்டியைக் கொண்டு சென்றாலும், அந்நாட்டுக்கான விசா தகவல்களை அளிக்கிறது. அத்துடன், நாடுகளின் பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஏதேனும் நாட்டை கிளிக் செய்தால், வரைபடத்தில் அதற்கான விவரம் சித்திரமாகத் தோன்றுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட நாடு சுட்டிக்காட்டப்பட்டு, மற்ற நாடுகளில் அதற்கான விசா நடைமுறை, சிறப்பு அனுமதி, விலக்கு, தடை உள்ளிட்ட விவரங்கள் தனி வண்ணத்தில் அடையாளம் காட்டப்படுகின்றன.