தொழில்நுட்பம்

இரண்டு சிம் ஸ்மார்ட் வாட்ச்

ரிஷி

இந்தியச் சந்தையில் ஸ்பைஸ் நிறுவனம், ஸ்மார்ட் பல்ஸ் எம் – 9010 என்னும் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. ஜாவாவை ஆபரேடிங் சிஸ்டமாகக் கொண்ட ஸ்பைஸ் டூயல் சிம் வாட்ச் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களிலும் இயங்கும்.

ப்ளுடூத் தொழில்நுட்பம் வாட்சையும் மொபைல் போனையும் இணைக்கிறது. இதிலிருந்து நேரிடையாக மொபைல் ‘கால்’கள் செய்யலாம். இன்பில்டாக சிம் உள்ள முதல் ஸ்மார்ட் வாட்ச் இது என்கிறார்கள். இதன் விலை ரூ. 4,999.

ஸ்மார்ட் வாட்ச் வகையறாக்களில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வாட்ச் இது. இதில் உள்ள இன்டர்னல் மெமரியில் 300 தொடர்பு எண்கள் வரையில் சேமித்துவைக்க முடியும். 8 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட மெமரி கார்டைப் பொருத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த வாட்சில் 3ஜி நெட்வொர்க் செயல்படாது.

கறுப்பு வண்ணத்திலும் நீல நிறத்திலும் இது கிடைக்கிறது. இதில் 2.5 இஞ்ச் அகலம் கொண்ட டச் ஸ்கிரீன் உள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக 1.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரி இந்த வாட்ச் இயங்கத் தேவையான சக்தியை அளிக்கிறது. சுமார் 180 நிமிடங்கள் பேசினாலும் இதன் பேட்டரி தாங்கும்.

இந்த ஸ்மார்ட் வாட்சைப் பயன்படுத்தி எஸ்.எம்.எஸ் அனுப்பலாம், நெட்டில் ப்ரௌஸ் பண்ணலாம். இது தவிர ஸ்மார்ட் போன்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால் பாட்டுக் கேட்கவும், புகைப்படம் எடுக்கவும், இன்கமிங், அவுட்கோயிங் ஆகிய கால்களைப் பார்க்கவும் இது உதவும்.

SCROLL FOR NEXT