தொழில்நுட்பம்

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ Flip ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ Flip என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் ரக போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஜீரோ Flip ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் Flip மற்றும் ஃபோல்டப்பிள் மாடல் போன்கள் அடுத்தகட்ட வடிவமைப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஜீரோ Flip ஸ்மார்ட்போனை பயனர்கள் சுமார் 4 லட்சம் முறை ஃபோல்ட் செய்யலாம் என இன்பினிக்ஸ் தெரிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.9 இன்ச் (ஃபுல் ஹெச்டி+ AMOLED) கொண்டுள்ளது பிரதான டிஸ்பிளே
  • 3.64 இன்ச் கொண்டுள்ளது வெளிப்புற டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 8020 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம். 15 மற்றும் 16 ஓஎஸ் அப்டேட் உறுதி அளிக்கப்பட்டுள்ளது
  • மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளது. இரண்டும் 50 மெகாபிக்சல் உடன் வெளிவந்துள்ளது
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4கே வீடியோ சப்போர்ட்
  • 8ஜிபி ரேம்
  • 512ஜிபி ஸ்டோரேஜ்
  • ஏஐ விலாக் மோட்
  • 4,720mAh பேட்டரி
  • 70 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • 10 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
  • 5ஜி சப்போர்ட்
  • வரும் 24-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இதன் விலை ரூ.44,999
SCROLL FOR NEXT