தொழில்நுட்பம்

தகவல் புதிது: கூகுள் குரோமில் புதிய வசதி

சைபர் சிம்மன்

ஆண்ட்ராய்டு போனில் கூகுள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் புதிய அம்சம் ஒன்றைக் கவனித்திருக்கலாம். பிரபலமான இணையப் பக்கங்கள் அனைத்தும் தானாக டவுன்லோடு செய்யப்படுவதுதான் அது. இந்தப் பக்கங்களை புதிய டேப் பகுதியில் காணலாம். (குரோமில் சைன் இன் செய்திருக்கும்போது இது செயல்படும்). இந்தப் பக்கங்களைப் பின்னர் எப்போது தேவையோ அப்போது அணுகலாம். அப்போது இணைய இணைப்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

ஆஃப்லைனிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இணைய பக்கங்களைப் பார்க்கும் வசதி என இதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், முழு இணையம் அல்ல; குரோமில் சேமிக்கப்பட்ட இணையம். இந்தியா போன்ற இணைய இணைப்பு மெதுவாக உள்ள நாடுகளுக்காக என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள வசதி இது என கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் செய்திச் சுருக்கங்கள் மட்டுமே இவ்வாறு சேமிக்கப்பட்டு வந்தன. தற்போது முழு உள்ளடக்கமும் சேமிக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு நிச்சயம் உதவிகரமான வசதிதான்.

SCROLL FOR NEXT