தொழில்நுட்பம்

ஜெப்ரானிக்ஸின் ஸ்மார்ட் டைம் 200: தொலைபேசி மற்றும் ஃபிட்னஸ் அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் வாட்ச்

செய்திப்பிரிவு

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், கையில் அணியக்கூடிய 'ஸ்மார்ட் டைம் 200' என்றழைக்கப்படும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் 32ஜிபி வரையிலான மைக்ரோ SD கார்டை பொருத்தலாம். இதன் பேட்டரி திறன் 380 mAh. மேலும் இதில் மைக்ரோ சிம்/ நானோ சிம் பொருத்தக்கூடிய வசதியும் உள்ளது.

பயனர்கள், தங்கள் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் மூலமாக இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்துடன் இணைத்து தொலைப்பேசி அழைப்புகளை ஏற்கலாம் அல்லது கைக்கடிகாரத்தில் உள்ளமைக்கப்பட்டிருக்கும் சிம் கார்ட், ஸ்பீக்கர் மற்றும் மைக் மூலமும் அழைப்புகளை ஏற்கலாம். யார் அழைக்கிறார்கள் என்ற விவரமும் இதன் தொடு திரையில் வரும்.

இதிலிருக்கும் பீடோமீட்டர் அம்சம் பயனர்கள் எவ்வளவு அடிகள் எடுத்து வைத்திருக்கிறார்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார்கள் போன்ற விவரங்களைத் தருகிறது. மேலும் பயனர்களின் தூக்க சுழற்சியையும் இது கண்காணிக்கிறது.

செவ்வக மற்றும் வட்ட வடிவத்தில் கிடைக்கும் இந்த கடிகாரத்தின் விலை ரூ. 2,999

SCROLL FOR NEXT